search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலுவை தொகை"

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அன்பழகன், சரவணன் மற்றும் சி.முத்துசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் ரமேஷ் , சரவணன், கணே சன், செந்தில்குமார் , செல்வ ம் , ரவிச்சந்திரன், பாலசு ப்ரமணியன், சித்ரா, வளர்மாலா, ராணி , அந்துவன்சேரல்ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஜாக்டோ-ஜியோ மாநில உயர்ம ட்டக்குழு முடிவின்படி, புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வர வேண்டும் , சரண் விடுப்பு ஒப்படைப்பு மீண்டும் வழங்கிட வேண்டும்,

    உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள காலிப் பணியி டங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும், 2002 முதல் 2004 தொகுப்புஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட பணிக்காலத்தை வரண்முறைசெய்திட வேண்டும் என்பது உள்ளி ட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி 1.11.23 அன்று நாகப்பட்டினம் அவுரி த்திடலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்து வது என்று முடிவெ டுக்க ப்பட்டது. முடிவில் சத்து ணவு ஊழியர் சங்க மாவ ட்டச் செயலாளர் அருளே ந்திரன் நன்றி கூறினார்.

    • கலைக்கப்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு நிலுவைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
    • கைத்தறி துறை உதவி இயக்குநர் அலுவலக தொலைபேசி எண்.0452-2535669-க்கு தொடர்பு கொண்டு தகவலை பெற்றுக் கொள்ளலாம்.

    மதுரை

    மதுரை கைத்தறி துறை உதவி இயக்குநர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு தற்போது கலைக்கப்பட்டுள்ள கீழ்கண்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் நெசவாளர்களுக்கு நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிலுவைத்தொகை உள்ளன.

    நிலுவைத்தொகையை இந்த செய்தி வெளியிடப்பட்ட 15 தினங்களுக்குள் அலுவலக நேரத்தில் 29, கக்கன் தெரு, செனாய் நகர், மதுரை-20 என்ற முகவரியில் இயங்கி வரும் கைத்தறி துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரில் வந்து உரிய ஆவணங்களுடன் (சங்க நெசவாளர் அட்டை மற்றும் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு ஒளிநகல்) கைத்தறி அலுவலர்/கலைத்தல் அலுவலரிடம் கோரிக்கை மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    அவ்வாறு சமர்ப்பிக்கும் பட்சத்தில் அரசிடம் இருந்து நிலுவைத் தொகையை பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்ட பயனாளிகளிடம் இருந்து உரிய கோரிக்கைகள் வராத பட்சத்தில் நிலு வையில் உள்ள தொகைகள் அனைத்தும் அரசுக்கு மீள சமர்ப்பிக்கப்படும்.

    கூடுதல் தகவல்களுக்கு மேற்கண்ட முகவரியில் இயங்கி வரும் கைத்தறி துறை உதவி இயக்குநர் அலுவலக தொலைபேசி எண்.0452-2535669-க்கு தொடர்பு கொண்டு தகவலை பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நிலுவை தொகை செலுத்தாத டிரஸ்ட் அலுவலகத்துக்கு சீல்வைக்கப்பட்டது.
    • நகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ஏ.கே. டி. டிரஸ்டுக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் கடைகள் உள்ளன. இதற்கு 2011-12 முதல் 2022-23 வரை சுமார் ரூ.30 லட்சம் நிலுவை தொகை உள்ளது. இந்த டிரஸ்டுக்கும், நகராட்சிக்கும் கோர்ட்டில் வழக்கு நடந்தது.

    இதில் நகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. அதன் பிறகும் டிரஸ்ட் அலுவலகம் நிலுவை தொகையை செலுத்தவில்லை. நிலுவை தொகையை செலுத்தக்கோரி அலுவலகம் மற்றும் டிரஸ்டுக்கு சொந்தமான கடைகளுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது. அதன் பிறகும் நிலுவை தொகைகள் நகராட்சிக்கு செலுத்தப்படவில்லை.

    இதையடுத்து ராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி தலைமையில் வருவாய் அலுவலர் முத்துசெல்வம், வருவாய் ஆய்வர்கள் பாண்டி, நாகராஜ், சிவராமன் மற்றும் நகராட்சி வருவாய் உதவியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், பணியாளர்களால் டிரஸ்ட் அலுவலகத்தை ஜப்தி செய்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    • எண். 194, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, நாள். 4.11.2022 வாயிலாக ஆணை வழங்கப்பட்டுள்ளது.
    • நிலுவையிலுள்ள அசல் தொகைக்கு நடைமுறையிலுள்ள தனிவட்டியுடன் மூன்று தவணைகளாகவோ செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ள சலுகை வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் : 

    கோவை வீட்டு வசதிப்பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-   தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையினை இதுவரை முழுமையாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுகொள்ளாத ஒதுக்கீடுதாரர்களுக்கு அதனை வட்டி தள்ளுபடியில் முழுமையாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ள அரசால் அரசாணை (நிலை) எண். 194, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, நாள். 4.11.2022 வாயிலாக ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    அந்தஅரசாணையின்படி திருப்பூர் மாவட்டத்தில்செயல்படுத்தப்பட்டுள்ளமுதலிபாளையம், பல்லடம் நிலை -I,II, பெரியார் நகர், பொள்ளாச்சி, உடுமலை பேட்டை, வேலம்பாளையம் ஆகிய திட்டங்களில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்று வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை இதுவரை முழுவதுமாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ளாத ஒதுக்கீடுதாரர்கள் வட்டி தள்ளுபடியில் அதனை ஒரே தவணையாகவோ அல்லது நிலுவையிலுள்ள அசல் தொகைக்கு நடைமுறையிலுள்ள தனிவட்டியுடன் மூன்று தவணைகளாகவோ செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ள சலுகை வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் இச்சலுகை வருகிற 3.5.2023 வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் எனவும், எக்காரணத்தைக்கொண்டும் கால நீட்டிப்பு செய்யப்படமாட்டாது . எனவே ஒதுக்கீடுதாரர்கள் இந்த அரிய வாய்ப்பினை தவறாது பயன்படுத்தி கிரையப்பத்திரம் பெற்று பயன்அடையுமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறது . இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

    • வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.
    • தலைமைச் செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்பட்டது.

    ஊட்டி,

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்தபோது குன்னூரில் அமைந்துள்ள தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைளை கேட்டறிந்தார். அப்ேபாது டேன்டீ கழகத்தை லாபம் ஈட்டக்கூடியதாகவும், செம்மையாகவும் நடத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

    அதன்படி, தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் பணிக்கொடை, முனைய விடுப்பு ஊதியம் மற்றும் இதர சட்டப்படி வழங்கப்பட வேண்டிய பயன்களான விடுப்புடன் கூடிய ஊதியம், மருத்துவ ஊதியம் வழங்க தேவையான 29.38 கோடி ரூபாயை விடுவிக்க கடந்த மாதம் தலைமைச் செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்பட்டது.

    இத்தொகையினை வழங்குவதன் மூலம் 1066 ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் மற்றும் 101 ஓய்வு பெற்ற ஊழியர்களும் பயன்பெறுவர். மேலும், தற்போது பணிபுரிந்து வரும் 3800 நிரந்தர தொழிலாளர்களும் மற்றும் 212 ஊழியர்களும் பயன்பெறுவர்.

    அதன்படி அரசிடமிருந்து ரூ.29.38 கோடி நிதி பெறப்பட்டது. அதனை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேற்று தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், குன்னூர் பதிவு அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு நேரில் வழங்கினார். கூட்டத்தில் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழக நிர்வாக இயக்குநர் மஞ்சுநாதா, ஐஎப்எஸ். பொதுமேலாளர் ஜெயராஜ். ஐஎப்எஸ் மற்றும் இதர டேன்டீ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    • செலுத்த வேண்டிய நிலுவையில் உள்ள பாக்கி தொகையை உடனடியாக செலுத்த வேண்டும்.
    • குடிநீர் இைணப்பு துண்டிக்கப்படும்.

    புன்செய்ப்புளியம்பட்டி:

    புன்செய்ப்புளியம்பட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறிருப்பதாவது:-

    புன்செய்ப்புளியம்பட்டி நகராட்சி எல்லைக்குட்பட்ட புன்செய்ப்புளியம்பட்டி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவையில் உள்ள சொத்துவரி, காலிமனை வரி, தொழில்வரி, கடை வாடகை, ஆண்டு குத்தகை ஆகியவற்றை உடனடியாக செலுத்தப்பட வேண்டும்.

    தவறும் பட்சத்தில் முன்அறிவிப்பு இன்றி தங்களுடையை குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    • சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கும், காயமடைந்தோருக்கும் முதல்வர் நிவாரண நிதி வழங்கப்படுகிறது.
    • திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுக்கும் நிவாரணம் வழங்கப்படாமல் உள்ளது.

    திருப்பூர் :

    சாலை விபத்து நிவாரண நிதிக்கு மாவட்டத்தில் 909 பேருக்கு ரூ. 8.64 கோடி நிலுவையில் உள்ளது. விரைவாக வழங்க வேண்டும் என நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து பல்லடம் தாலுகா நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க தலைவர் மணிகுமார் கூறியதாவது:-

    தமிழகத்தில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கும், காயமடைந்தோருக்கும் முதல்வர் நிவாரண நிதி வழங்கப்படுகிறது. சாலை விபத்து மற்றும் இழப்பு குறித்த விவரங்களுடன் இதற்கான விண்ணப்பம் கலெக்டர் மூலம் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு, பயனாளிகளுக்கு முதல்வர் நிவாரண நிதி மூலம் குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்கப்பட வேண்டும்.அவ்வகையில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக 909 பேர் இந்த நிவாரணத்துக்கு தகுதியானோராக தேர்வு செய்யப்பட்டு ரூ.8.64 கோடி நிவாரணம் வழங்கப்படாமல் உள்ளது.இது குறித்து கலெக்டர் தலைமையில் நடைபெற்ற நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    மாவட்ட நிர்வாகம் இதற்கான நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • கலெக்டர், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
    • ஒரு சில விவசாயிகள் நீண்டநேரம் பேச அனுமதி வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு விவசாயிகள் கலந்துகொண்டு, தங்கள் பிரச்சினைகளை மாவட்ட கலெக்டர் முன்பு எடுத்துக் கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் மோகன், உடனடியாக நடவடிக்கை எடுக்க அந்தந்தத் துறை ரீதியான அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், ஒரு சில விவசாயிகள் நீண்டநேரம் பேச அனுமதி வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும், இந்த கூட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை, ஆலை நிர்வாகம் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    • கரும்பு நிலுவை தொகை வழங்காததை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உத்தாணி மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தஞ்சாவூர்-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருமண்டங்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு கரும்பு நிலுவை தொகையினை வழங்காததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாபநாசம் அருகே உத்தாணி மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் தஞ்சாவூர்-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்துகள் மாற்றி விடப்பட்டன. சம்பவ இடத்திற்கு கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் லதா, பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதனன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    வருகிற 21-ந்தேதி மதியம் 12 மணி அளவில் கும்பகோணம் ஆர்.டி.ஓ. தலைமையில் ஆலை நிர்வாகம், விவசாயிகள் மற்றும் தொடர்புடைய பிற நபர்களின் அழைத்து தீர்வு காண்பதற்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்டு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

    ×